இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு


இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
x

வெள்ளம், நிலச்சரிவு என கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் பாதிப்புகளை நாம் பார்த்தோம்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 125-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.

இதில் பருவமழையை குறிப்பிட்டு அவர் பேசும்போது, இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. வீடுகளை சேதப்படுத்தி விட்டன. வயல்வெளிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. குடும்பங்கள் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவு என பெரிய அளவில் பாதிப்புகளை நாம் பார்த்தோம். தொடர்ந்து அதிகரித்து வந்த நீரால், பாலங்களும், சாலைகளும் அடித்து செல்லப்பட்டன. பொதுமக்களின் வாழ்க்கை ஆபத்தில் தள்ளப்பட்டது. இந்த சம்பவங்களால், ஒவ்வோர் இந்தியரும் துயர் அடைந்துள்ளார் என கூறியுள்ளார்.

வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டபோது, இரவு பகலாக நிவாரண பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பங்காற்றிய தேசிய பேரிடர் மேலாண் படை, மாநில பேரிடர் மேலாண் படை மற்றும் பிற பாதுகாப்பு படைகளுக்கும் தன்னுடைய பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்து கொண்டார்.

1 More update

Next Story