'எதிர்கால தேவைகளுக்காக இயற்கை வளங்களை சுரண்டக் கூடாது' - தலைமை நீதிபதி சந்திரசூட்

நமது எதிர்கால தேவைகளுக்காக இயற்கை வளங்களை சுரண்டக் கூடாது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
'எதிர்கால தேவைகளுக்காக இயற்கை வளங்களை சுரண்டக் கூடாது' - தலைமை நீதிபதி சந்திரசூட்
Published on

பனாஜி,

கோவா கவர்னர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை எழுதியுள்ள 'பாரதத்தின் பாரம்பரிய மரங்கள்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா பனாஜியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"இயற்கை என்பது நிகழ்காலம். எனவே, எதிர்கால தேவைகளுக்காக இயற்கை வளங்களை சுரண்டக் கூடாது. நமது தேவைக்கு ஏற்ற அளவிற்கு மட்டுமே இயற்கை வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை எழுதியுள்ள புத்தகம் மனித வாழ்க்கையில் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இந்த புத்தகத்தில் இருக்கும் பல்வேறு பாரம்பரிய மரங்களை பற்றிய தகவல்கள், மனித கலாசாரத்திற்கும், அன்னை பூமிக்கும் இடையே இருக்கும் உறவை விளக்குகிறது."

இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com