

நவி மும்பையின் உரான் பகுதியில் உள்ள கோப்டே பாலத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், அந்த இயக்கத்தின் தலைவன் அல்-பாகத்தி, பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாராட்டி தகவல் எழுதப்பட்டுள்ளது. அதில் தாக்குதல் விபரங்களும் இடம் பெற்றுள்ளது. அந்த தகவல் செய்தியில் ரகசிய பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் தெரிந்ததும் உளவுத்துறை, தேசிய புலனாய்வு பிரிவு, மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அங்கு சோதனையை மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மராட்டிய மாநில போலீஸ் தனிப்படையை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பாலம் பகுதியில் முக்கியமான இடங்கள் உள்ளது என குறிப்பிடும் அதிகாரிகள் இதனை எளிதாக விடமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு இளைஞர்கள் மொத்தமாக வந்து மதுபானம் அருந்திவிட்டு செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.