

40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.இதற்கிடையில், போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் ஆகியுள்ளதை குறிக்கும்விதமாக இன்றைய தினத்தை (மே 26) கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக விவசாய சங்கங்கள்
அறிவித்துள்ளன.இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று கறுப்பு கொடி ஏற்றினார்.
அதுதொடர்பாக அவர் வௌயிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விவசாய சமுதாயத்தை முழுமையாக அழிக்கும் 3 கறுப்பு சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் போராடி வருகிறது. அந்த போராட்டத்துக்கு ஆதரவாக கறுப்புக் கொடி ஏற்றியுள்ளேன். பஞ்சாப் மக்கள் ஒவ்வொருவரும் விவசாயிகளை ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.டுவிட்டரில் ஒரு சிறு வீடியோவையும் நவ்ஜோத்சிங் சித்து வெளியிட்டுள்ளார். தனது மனைவி நவ்ஜோத் கவுருடன் தோன்றும் அந்த வீடியோவில், தான் ஏற்றியுள்ள கறுப்புக் கொடி, புதிய வேளாண் சட்டங்களை நிராகரிப்பதன் அடையாளம் என்று கூறியுள்ளார்.