நவராத்திரி விழா தொடங்கியது: பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழா தொடங்கியது: பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழா இன்று (புரட்டாசி மாதம் 6-ம் நாள்) ஆரம்பமாகிறது. இன்று முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com