நவராத்திரி விழா: பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி ‘கன்யா பூஜை’ செய்த உ.பி. முதல் மந்திரி


நவராத்திரி விழா: பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி ‘கன்யா பூஜை’ செய்த உ.பி. முதல் மந்திரி
x

பெண் குழந்தைகளை துர்க்கையின் வடிவமாக கருதி, அவர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

லக்னோ,

வட மாநிலங்களில் நவராத்திரி விழாவானது தினந்தோறும் சிறப்பு பூஜைகள், உற்சவங்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நவராத்திரி விழாவின் 9-வது நாளில்‘கன்யா பூஜை’ நடத்தப்படுகிறது. இந்த பூஜையின்போது கோவில்களிலும், வீடுகளிலும் 2 முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளை துர்க்கையின் வடிவமாக கருதி, அவர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் கன்யா பூஜை நடைபெற்றது. இதில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, 20-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி பூஜை செய்தார். பின்னர் அந்த குழந்தைகளுக்கு அவர் அன்னதானம் வழங்கினார். இதன் பின்னர் பேசிய அவர், பாரதத்தின் சனாதன தர்மத்தின் பாரம்பரியத்தின்படி பெண் சக்தியை வழிபடும் இந்த பூஜை, புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

1 More update

Next Story