மனைவியின் மார்பிங் செய்த புகைப்படத்தினை ஆன்லைனில் வெளியிட்ட இந்திய கப்பற்படை உயரதிகாரி

இந்திய கப்பற்படை உயரதிகாரி ஒருவர் மனைவியின் மார்பிங் செய்த புகைப்படத்தினை ஆன்லைனில் வெளியிட்டதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மனைவியின் மார்பிங் செய்த புகைப்படத்தினை ஆன்லைனில் வெளியிட்ட இந்திய கப்பற்படை உயரதிகாரி
Published on

புனே,

முன்னாள் ராணுவ அதிகாரியான பெண் ஒருவர் தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதில், டெல்லியில் இந்திய கப்பற்படை உயரதிகாரியாக இருக்கும் 39 வயது நிறைந்த தனது கணவர் போர்னோகிராபிக்கு (பாலியல் படங்கள்) அடிமையாகி விட்டார் என தெரிவித்துள்ளார்.

இந்த பழக்கத்தில் இருந்து அவரை வெளிகொண்டு வர அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு மனைவி சென்று விட்டார்.

தொடர்ந்து கடந்த மாதம் அவரது மனைவி விவகாரத்து கோரி மனு செய்துள்ளார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து புனேவுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அப்பொழுது கணவரின் மொபைல் போனையும் கொண்டு சென்றுள்ளார். அதனை ஆய்வு செய்ததில், மனைவியின் மார்பிங் செய்த புகைப்படங்கள் இருந்துள்ளன.

இது தவிர்த்து அதிகாரியுடன் பணிபுரியும் மற்றொரு அதிகாரியின் மனைவி மற்றும் வேறு சில பெண்களின் மார்பிங் செய்த புகைப்படங்களும் இருந்துள்ளன. இந்த அதிகாரி தனது இ மெயிலை பயன்படுத்தி புகைப்படங்களை அதற்குரிய ஆப்பில் பதிவேற்றியுள்ளார்.

அதிகாரிக்கு மற்றொரு அதிகாரியின் மனைவியுடன் தொடர்பு உள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொள்ள கப்பற்படை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம் என கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com