ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவர் மரணம்

சத்தீஷ்கார், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளார்.
ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவர் மரணம்
Published on

புதுடெல்லி,

நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஷ்காரில் மாவோயிஸ்டு தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அக்கிராஜு ஹரகோபால் என்ற ராமகிருஷ்ணா (வயது 57).

இவர், சத்தீஷ்கார், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளார். அவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சமீப நாட்களாக உடல்நல குறைவால் அவர் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனை உளவு பிரிவு அமைப்புகளும் உறுதி செய்துள்ளன. இந்த சூழலில், சத்தீஷ்காரின் தெற்கு பஸ்தார் மாவட்டத்தில் தண்டகாரண்ய பகுதியில் வசித்து வந்த அவர் மரணம் அடைந்து உள்ளார்.

எனினும், அவரது மரணம் பற்றி உறுதிப்படுத்தும் வகையிலான அறிக்கை எதனையும் மாவோயிஸ்டு அமைப்புகள் இன்னும் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com