

இந்நிலையில் இந்த இரும்புத்தாது சுரங்க பகுதியில் நேற்று ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கு சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட 4 வாகனங்களுக்கும் அவர்கள் தீவைத்தனர். தாக்குதலுக்குப் பின்பு, சுரங்கப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மாயமாகிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்களுக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.