போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உயிருக்கு ஆபத்தில்லை என்பதை அரசு உறுதிபடுத்தவேண்டும்: ராம்தாஸ் அத்வாலே

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீபர் வான்கடே உயிருக்கு ஆபத்தில்லை என்பதை அரசு உறுதிபடுத்த வேண்டும் என ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி உள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உயிருக்கு ஆபத்தில்லை என்பதை அரசு உறுதிபடுத்தவேண்டும்: ராம்தாஸ் அத்வாலே
Published on

அதிரடி சோதனை

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பல் ஒன்றில் சமீபத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கப்பலில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனைக்கு தலைமை தாங்கியவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே ஆவார்.இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

ஜெயிலுக்கு போவார்...

குறிப்பாக நவாக் மாலிக் சமீபத்தில் அளித்த பேட்டியில், சமீர் வான்கடே எவ்வளவு போலியானவர் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அவரது போலிதன்மை நிரூபிக்கப்பட்டால் ஒருநாள் கூட அவரால் வேலையில் இருக்க முடியாது என்றும், அவர் ஜெயிலுக்கு போவது உறுதி என தெரிவித்தார். இந்தநிலையில் மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே அதிகாரி சமீர் வான்கடேவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது:-

சாதிய சாயத்தை பூச முயற்சி

மந்திரி நவாப் மாலிக் சமீர் வான்கடே மீது மத மற்றும் சாதிய சாயத்தை பூச முயற்சி செய்கிறார்.வான்டேவின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.சொகுசு கப்பலில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்யன் கானுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. அதனால் தான் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

சமீர் வான்கடே எந்த தவறும் செய்யவில்லை. அவரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் போதைபொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேலை செய்கிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பதிலாக நவாப் மாலிக், சமீர் வான்கடேவை குறிவைக்கிறார்.அவரது மருமகன் சமீன்கான் மீது வான்கடே நடவடிக்கையை எடுத்தால் இவ்வாறு செய்கிறார். நவாப் மாலிக்கின் புகார்கள் ஆதாரமற்றது.

இ்வ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com