தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டு வேலைக்காரர்கள் 5 பேருக்கு கொரோனா

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டு வேலைக்காரர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டு வேலைக்காரர்கள் 5 பேருக்கு கொரோனா
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் பங்களா வீடு தென்மும்பை பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் வேலை செய்யும் 3 காவலாளிகள், ஒரு சமையல்காரர் மற்றும் அவரது மகன் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து உடனடியாக சரத்பவார் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார்.

இந்த தகவலை வெளியிட்ட மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, சரத்பவார் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறினார். ஆனால் இன்னும் சில நாட்களுக்கு மாநில சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம் என்று சரத்பவாரை கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com