பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை
Published on

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக நிதிஷ்குமார் உள்பட பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் இன்று கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com