ஒசதுர்கா அருகே பள்ளத்தில் லாரிகள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

ஒசதுர்கா அருகே பள்ளத்தில் லாரிகள் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
ஒசதுர்கா அருகே பள்ளத்தில் லாரிகள் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு
Published on

சிக்கமகளூரு;

கர்நாடகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதுபோல் சித்ரதுர்கா மாவட்டத்திலும் கனமழை பெய்து ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் இருந்து ஒசதுர்கா நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

அந்த லாரி ஒசதுர்கா நெடுஞ்சாலையில் பரமகிரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மழையால் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. பின்னர் அந்த லாரியை பள்ளத்தில் இருந்து மீட்க முடியவில்லை.

இதற்கிடையே அந்த லாரிக்கு எதிர் திசையில் வந்த மற்றொரு லாரியும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. 2 லாரிகளும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். மேலும் பள்ளத்தில் இருந்து அந்த லாரிகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com