இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு..!
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 ஆக இருந்த நிலையில் இன்று 1 லட்சத்து 94 ஆயிரத்து 720 அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 60 லட்சத்து 70 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 60 ஆயிரத்து 405 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 442 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 84 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 407 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆயிரத்து 805 பேர் குணமடைந்த நிலையில் 3 ஆயிரத்து 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com