

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கத்தைத் தொடங்கினார். அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர்.
ஒருகட்டத்தில், பாலோயர்கள் எண்ணிக்கையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே முந்தியது. இதனால், மத்திய அரசுக்கு அந்த இன்ஸ்டா பக்கத்திற்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப் பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்தப் பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற 'கரப்பான் ஜனதா கட்சி', இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத்திற்கு முன்னதாக, தனது அமைப்பை விரிவுபடுத்த மூன்று புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் செய்ய வலியுறுத்தி, ஜூன் 6 ஆம் தேதி டெல்லியில் அமைதிப் போராட்டம் நடத்த இக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டமிட்டுள்ளார்.