நீட் தேர்வு ஆடை சர்ச்சை விவகாரம் - தேசிய தேர்வுகள் முகமை மறுப்பு

இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வு,கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுதும்,நடந்தது.
Image Courtesy : PTI 
Image Courtesy : PTI 
Published on

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - ஆயுஷ் படிப்புகள் போன்றவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி அவசியம். இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு, நீட் நுழைவு தேர்வு,கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது.

தமிழகத்தில் 18 நகரங்களில் நடந்தது.நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக, முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடையை கழற்றிய பிறகு தேர்வு எழுத அனுமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொல்லம் சூரநாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் அளித்துள்ள புகாரில் தேர்வுக்கு சென்ற என்னை அங்கிருந்தவர்கள் உள்ளாடை மற்றும் மேலாடையை கழற்ற கூறி சோதனை செய்தனர். என்னை போல பல மாணவிகளின் உள்ளாடைகளையும் கழற்றி சோதனை செய்தனர். கழற்றப்பட்ட உள்ளாடைகளை அங்குள்ள ஒரு அறையில் வைத்திருந்தனர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது என கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை,அது போன்ற ஒரு சம்பவம் அந்த குறிப்பிட்ட மையத்தில் நடைபெறவில்லை என்றும், மேலும் அந்த மாணவி நீட் தேர்வு எழுதியுள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக உடனடியாகவோ, தேர்வு நடந்து முடிந்த பின்னோரோ எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை. ஆடை கட்டுப்பாடு வழிமுறையில் இதுபோன்று நடைமுறைகளை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவியின் புகாரில் கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com