நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
Published on

புதுடெல்லி,

நாடு முழுதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது. இந்தநிலையில், மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 26 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மருத்துவக் கனவோடு இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்கள், தங்களின் நுழைவுச்சீட்டை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண், தேர்வு நடைபெறும் நாள், மாணவர்களுக்கான தேர்வு மையம், தேர்வு மையத்தின் முழுமையான முகவரி, தேர்வு நேரம் மற்றும் தேர்வு மையத்திற்குள் நுழையும்போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தகவல்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். மாணவர்கள் தேர்வு அறைக்குச் செல்லும்போது இந்த ஹால் டிக்கெட்டை கட்டாயமாகத் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com