

புதுடெல்லி,
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 11 மொழிகளில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.