நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர்.
நீட் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on

புதுடெல்லி,

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிந்த 10 நாட்களே ஆன நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மண்டவியா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு நீட் முதுகலை தேர்வை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 318 தேர்வர்கள் எழுதினர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com