நீட் வினாத்தாள் கசிவு: புனேவை சேர்ந்த பேராசிரியை கைது:

தாவரவியல் பேராசிரியையான மனிஷா மந்தாரே ரகசிய வகுப்பில் மாணவர்களுக்கு வினாத்தாளை கசியவிட்டதாக கூறப்படுகிறது.
நீட் வினாத்தாள் கசிவு: புனேவை சேர்ந்த பேராசிரியை கைது:
Published on

மும்பை,

நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு எழுதி இருந்தனர். இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.வழக்கை விசாரிக்க தொடங்கிய 3 நாட்களுக்குள், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இதில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட லாத்தூரை சேர்ந்த பிரபல வேதியியல் பேராசிரியரான பி.வி.குல்கர்னி என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் புனேயில் உள்ள அவரது வீட்டில் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர் பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான வினாத்தாள்களை தயாரிக்கும் முக்கிய குழுக்களில் இடம்பெற்றிருந்தவர் ஆவார். இந்த நிலையில், இந்த விவகாராத்தில் மூளையாக செயல்பட்ட பெண் பேராசிரியை மனிஷா மந்தாரே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com