

நீட் மறு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதும் பல தேர்வர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பெற முயற்சிக்கும் போது பக்கம் திறக்காதது, பதிவிறக்கம் நடுவில் நின்றுவிடுவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து தேசிய தேர்வு முகமை (NTA) விளக்கம் அளித்துள்ளது. சர்வர் கோளாறு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், விரைவில் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு ஹால் டிக்கெட் வெளியீடு சீராக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 4 லட்சம் தேர்வர்கள் வெற்றிகரமாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாக என்.டி.ஏ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், தேர்வர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்பட்டு மீதமுள்ள அனைவருக்கும் ஹால் டிக்கெட் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.