நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்...டெல்லி முதல்-மந்திரி

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்...டெல்லி முதல்-மந்திரி
Published on

புதுடெல்லி,

கடந்த மாதம் மே 3-ந் தேதி நடைபெற்ற நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில், தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) உத்தரவிட்டது. இதையடுத்து மறுதேர்வு வருகிற ஜூன் 21-ந் தேதி நடத்தப் பட உள்ளது.

இதையொட்டி, ஜூன் 21-ந் தேதியன்று நடைபெற உள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டெல்லி போக்குவரத்து கழக பஸ்களில் இலவச பயண வசதி வழங்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பதிவில், "ஜூன் 21 அன்று நடைபெறும் இளநிலை நீட்-2026 தேர்வில் பங்கேற்கும் மாணவர் கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து அனைத்து அரசு பஸ்களி லும் இலவசமாக பயணம் செய்யலாம். மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com