மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு தொடங்கியது

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு தொடங்கியது
Published on

புதுடெல்லி,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வுக்காக 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானதால், இந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது.

பின்னர் இந்த தேர்வு ஆகஸ்டு 11-ம் தேதி இன்று காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில்,  இன்று திட்டமிட்டபடி  தேர்வு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் சுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். நாடு முழுவதும் 2 லட்சம் பேர் எழுதுகிறார்கள். காலை 9.30 மணியில் இருந்து 12.30 மணி வரை முதல் ஷிப்டும், பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7.30 மணி வரை இரண்டாவது ஷிப்ட் தேர்வும் நடைபெறுகிறது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com