பக்கத்து வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்ற சிறுமி பலாத்காரம்

வீட்டிற்கு டி.வி. பார்க்க வந்த சிறுமியை பலமுறை தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், அதனால் கர்ப்பமான சிறுமியை வீட்டிற்கு தெரியாமல் அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தது அம்பலமாகி உள்ளது.
பக்கத்து வீட்டுக்கு டி.வி. பார்க்க சென்ற சிறுமி பலாத்காரம்
Published on

மங்களூரு:-

டி.வி. இல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் வீட்டிற்கு டி.வி. பார்ப்பதற்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. பெல்தங்கடி தாலுகா கடிருத்யவாரா கிராமத்தை சேர்ந்தவர் சுதிர். தொழிலாளி. இவரது வீட்டின் அருகே பெற்றோருடன் ஒரு சிறுமி வசித்து

வருகிறாள். அந்த சிறுமி வீட்டில் டி.வி. இல்லை என கூறப்படுகிறது.

இதனால் அவள் பக்கத்தில் உள்ள சுதிர் வீட்டிற்கு சென்று டி.வி. பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளாள். இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் காலை முதல் இரவு வரை சிறுமி, சுதிர் வீட்டில் தனியாக இருந்து டி.வி. பார்த்துள்ளாள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சுதிர், வீட்டின் கதவை பூட்டி கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் சிறுமியை வற்புறுத்தி பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமாகி உள்ளாள். இதுகுறித்து அறிந்த சுதிர், நண்பர்கள் சிலர் உதவியுடன் சிறுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார்.

பலமுறை பலாத்காரம்

இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்துள்ளாள். எனினும், அவர் சிறுமியை தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுமி நடந்ததை கூறி தனது பெற்றோரிடம் அழுதுள்ளாள்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உதவியுடன் பெல்தங்கடி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும், சிறுமியை பலாத்காரம் செய்த சுதிர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மனோகர், மதன், பார்வதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com