மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் நேபாள வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையேயான கூட்டு ஆணையத்தின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் நேபாள வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
Published on

புதுடெல்லி,

நேபாள வெளியுறவுத்துறை மந்திரி பிரதீப் குமார் கியாவாலி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதீப் குமார் கியாவாலி இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையேயான கூட்டு ஆணையத்தின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மற்றும் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், பொருளாதாரம், இணைப்பு, வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயும், நீர் வளம், அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் எல்லை மேலாண்மை ஆகியவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தத் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com