நேபாள அதிபருக்கு கொரோனா பாதிப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதி

நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காட்மாண்டு,

நேபாள அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் திரிபுவன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுள்ளதால் கவலையளிக்கும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படாது என நம்பிக்கையும் தெரிவித்து உள்ளனர். அண்டை நாடான நேபாளத்தில் நேற்றைய நிலவரப்படி 570 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com