பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் புதிய செயலி - கேரளாவில் அறிமுகம்

பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் புதிய செயலி கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் புதிய செயலி - கேரளாவில் அறிமுகம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநில கல்வித்துறையின் தொழில்நுட்ப பிரிவான 'கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம்'(KITE) சார்பில், 'சம்பூர்ணா பிளஸ்' என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பள்ளி மாணவர்களின் வருகைப்பதிவு உள்ளிட்ட தகவல்களை பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும்.

மாணவர்களின் வருகைப் பதிவேடு, தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள், விளையாட்டு போட்டிகளில் அவர்களின் ஈடுபாடு என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த செயலி மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுதும், 12,943 பள்ளிகளில் படிக்கும், 36.44 லட்சம் மாணவர்களின் தகவல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மொபைல் செயலி சேவை சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com