4 மாநிலங்களுக்கு பா.ஜ.க.வின் புதிய தலைவர்கள் நியமனம்

இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக கட் சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்து உள்ளார்.
4 மாநிலங்களுக்கு பா.ஜ.க.வின் புதிய தலைவர்கள் நியமனம்
Published on

புதுடெல்லி,

டெல்லி, பஞ்சாப், திரிபுரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு பா.ஜனதா வின் புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் இந்த நியமனங்களை செய்துள்ளார். அதன் படி டெல்லிக்கு மத்திய மந்திரி ஹர்ஷ் மல்கோத்ரா புதிய தலைவராகி இருக்கிறார். அரியானாவுக்கு அர்ச்சனா குப்தா, பஞ்சாப்புக்கு சர்தார் கேவல் சிங் தில்லான் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திரிபுராவுக்கு அபிஷேக் தெப்ராய் என்ற எம்.எல்.ஏ. பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக கட் சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com