காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய கட்டிடங்கள் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய கட்டிடங்கள் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
Published on

வாரணாசி,

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டிய பகுதிகள் நவீன முறையில் புணரமைக்கப்பட்டு உள்ளது. புனித நீராடி விட்டு, தண்ணீரை எடுத்து வந்து கோவிலில் அபிஷேகம் செய்யும் சம்பிரதாய பணியில் பக்தர்கள் ஏராளமான இடையூறுகளை சந்தித்து வந்தனர்.

இதை கருத்திற்கொண்டு, ரூ.339 கோடி செலவில் கோவிலில் இருந்து கங்கை நதிக்கரை வரை பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கும் அறைகள், அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், சுற்றுலா மையம், உணவு கூடங்கள் என மொத்தம் 23 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவிலின் நுழைவாயில் மற்றும் இதர கட்டுமானங்கள், பாரம்பரிய முறைப்படி கற்கள் மற்றும் இதர மூலப்பொருட்களை கொண்டு கட்டப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் இந்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த கட்டிடங்கள் திறப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி பகல் 1 மணிக்கு வாரணாசிக்கு வருகிறார். கோவிலில் தரிசனம் செய்கிறார். புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

இந்த விழாவையொட்டி, வாரணாசி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுமக்கள், அர்ச்சகர்கள், வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள் என அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இந்த புதிய வசதிகளால் வாரணாசியில் சுற்றுலா மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com