முதன் முறையாக அமையுள்ள புல்லெட் ரயிலில் அதிநவீன வசதிகள்: ரயில்வே அறிவிப்பு

மும்பை- அகமதாபாத் இடையே அமையுள்ள புல்லெட் ரயிலில் அதிநவீன வசதிகள் இருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளார்.
முதன் முறையாக அமையுள்ள புல்லெட் ரயிலில் அதிநவீன வசதிகள்: ரயில்வே அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லெட் ரயில் திட்டத்தை இந்தியாவிலும் நடமுறைப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டது. இதற்காகசுமார் ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான 25 ஈ5 ஷிங்காசென் வகை புல்லட் ரயில்களை ஜப்பானிடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இந்தியாவில் முதல் முறையாக மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் 731 இருக்கைகள் இருக்கும். மேலும், பல்வேறு நவீன வசதிகளும் இந்த ரயிலில் இருக்கும். ஆண்கள், பெண்களுக்கு தனி கழிவறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக இடவசதியுடன் கூடிய கழிவறைகளும் இந்த ரயிலில் இருக்கும். ஓய்வறைகளும், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக பெண்களுக்கு தனி அறைகளும் இந்த ரயிலில் இருக்கும். ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் தனித்தனியான வாஷ்பேஷன் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.

மும்பை-ஆமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரம் 7 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும்.சாதாரண வகுப்பில் 698 இருக்கைகளும், பிஸினஸ் வகுப்பில் 55 இருக்கைகளும் இந்த ரயிலில் இருக்கும் என்று ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com