செப்டம்பர் முதல் ஆந்திராவிற்கு புதிய தலைநகர்..!

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
செப்டம்பர் முதல் ஆந்திராவிற்கு புதிய தலைநகர்..!
Published on

ஆந்திரா,

ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மேகன் ரெட்டி, பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் ஜெகன்மேகன் ரெட்டி பேசியதாவது:- "நிர்வாகப் பரவலாக்கத்தின் ஒரு பகுதியாக, வருகிற செப்டம்பர் மாதம் முதல் விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு நிர்வாகம் மேற்கொள்ளப்படும். செப்டம்பரில் இருந்து தானும் விசாகப்பட்டினத்திலேயே தங்கவுள்ளதாகவும், விசாகப்பட்டினம் மாநிலத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகரம்" எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com