ரெயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள் - அடுத்த மாதம் முதல் அமல்

இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.
New changes in Railway Tatkal ticket booking - to be implemented from next month
Published on

மும்பை,

இந்திய ரெயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

2025 ஜூலை 1 முதல், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யலாம். 2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் ஓடிபி (OTP) அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாகும்.

அதிகாரபூர்வ பிஆர்எஸ் (PRS) கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் ஓடிபி (OTP)யை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும். இது 2025 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.

அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குளிர்சாதன வகைகளுக்கு: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை

சாதாரண வகைகளுக்கு: காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை.

இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com