விவசாயிகள் மீது மோதும் கார்; புதிய, தெளிவான வீடியோ வெளியாகி பரபரப்பு

லகிம்பூரில் விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதும் புதிய மற்றும் தெளிவான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் மீது மோதும் கார்; புதிய, தெளிவான வீடியோ வெளியாகி பரபரப்பு
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் லகிம்பூர் கெரி மாவட்டத்தின் லகிம்பூரில் கடந்த 10-ந் தேதி பாஜகவினர் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், 1 பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதுவது போன்று வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் வெளியான வீடியோவில் தெளிவற்ற தன்மையுடனும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில், விவசாயிகள் மீது பாஜகவினரின் கார் மோதும் பதபதக்கைவைக்கும் வீடியோ தெளிவான காட்சிகளாக தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோவில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பயணம் செய்ததாக கூறப்படும் காருக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வேகமாக மோதிச்சென்ற தெளிவான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விவசாயிகள் மீது மோதிய கார் நிற்காமல் வேகமாக செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com