புதிய யானைகள் முகாம் தொடக்கம்

மைசூருவில் புதிய யானைகள் முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய யானைகள் முகாம் தொடக்கம்
Published on

மைசூரு:

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் உள்ள நாகரஒலே வனச்சரணாலயத்திற்கு உட்பட்ட பீமனகட்டே பகுதியில் புதியதாக கும்கி யானைகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பிரியப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ. கே.மகாதேவா கலந்துகொண்டு யானை முகாம் கட்டிடத்தை திறந்துவைத்தார்.

மேலும் முகாமில் கும்கி பயிற்சி அளிக்க வரவழைக்கப்பட்டுள்ள 4 யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அவர் வாழைப்பழம், கரும்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாரஒலே உதவி வன பாதுகாவலர் வி.சி.ஹர்ஷா மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com