கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல் வெளியீடு..!

கொரோனா பரிசோதனைக்கு புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹமிர்பூர்,

கொரோனா பரிசோதனை உத்தியில் புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய தகவல்கள்:-

* கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து இணை நோயுடன் போராடுகிறவர்கள் இடையே சமூக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* வெளிநாடு செல்கிற தனிநபர்கள், வெளிநாடுகளில் இருந்து இங்கு வருவோர் அனைவரும் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

* ஆஸ்பத்திரிகளில் டாக்டரின் முடிவின்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படலாம். பரிசோதனை வசதி இல்லாத காரணத்தால் எந்தவொரு அவசர சிகிச்சையும் தாமதிக்கக்கூடாது. வேறு இடங்களுக்கும் அனுப்பக்கூடாது.

* பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் உள்பட அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுவோருக்கு அறிகுறிகள் இல்லாதபோது கொரோனா பரிசோதனை தேவையில்லை.

* அறிகுறிகள் இல்லாதவர்கள், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை.

* வீட்டில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, டிஸ்சார்ஜ்கொள்கைப்படி வெளியேறியவர்கள், மாநிலங்களுக்கு இடையே உள்நாட்டு பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளத்தேவையில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com