ஆணுறைகளை போதை பொருளாக பயன்படுத்தும் இளைஞர்கள்...!

ஆணுறை முதல் இருமல் சிரப் வரை, இந்தியர்கள் போதைப்பொருளாகப் பயன்படுத்தும் ஆர்வமுள்ள பொருட்களாக் மாறி வருகிறது.
ஆணுறைகளை போதை பொருளாக பயன்படுத்தும் இளைஞர்கள்...!
Published on

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் துர்காபூரில், மாணவர்கள் ஆணுறைகளுக்கு அடிமையாகியுள்ளனர் ஆனால் நீங்கள் நினைக்கும் காரணங்களுக்காக அல்ல.

துர்காபூர் நகர், பிதான்நகர், பெனாசிட்டி, முச்சிபாரா, சி மண்டலம் மற்றும் ஏ மண்டலம் ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் வரிசையில் நின்று ஆணுறைகலை வாங்கி செல்கின்றனர். இதனால் ஆணுறை விற்பனை பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக துர்காபூரில் உள்ள கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆணுறைகளை மேற்கு வங்காளத்தின் துர்காபூரில், மாணவர்கள் ஆணுறைகளுக்கு அடிமையாகியுள்ளனர் - ஒருவர் நினைக்கும் காரணங்களுக்காக அல்ல.

ஆணுறைகளை சூடான நீரில் ஊறவைக்கும்போது, ஒருவித போதை தரும் ஆல்கஹால் வெளியாகிறது. மாணவர்கள் அந்த திரவத்தை அருந்துகிறார்கள். இது மிகவும் போதை தரக்கூடியதாக உள்ளது. இந்த திரவம் மாணவர்களுக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை போதை தருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து துர்காபூர் கல்லூரி வேதியியல் ஆசிரியர் நூருல் ஹக் கூறும் போது ஆணுறைகளை நீண்ட நேரம் வெந்நீரில் ஊறவைப்பதால் பெரிய கரிம மூலக்கூறுகள் உடைந்து ப்பொதை தரும் ஆல்கஹால் கலவைகள் உருவாகின்றன. இந்த கலவை இளைஞர்களை போதை ஆழ்த்துகிறது என கூறினார்.

துர்காபூர் மாவட்ட மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் திமான் கூறும் போது ஆணுறையில் ஒருவித நறுமண கலவை உள்ளது. அதை உடைப்பதன் மூலம் மது உற்பத்தியாகிறது என கூறினார்.

இளைஞர்கள் போதைக்காக புதுமையான வழிகளைக் கண்டறிவது இது முதல் முறை அல்ல

இருமல் மருந்து குடிப்பது, நெயில் பாலிஷ்,கை சுத்திகரிப்பான் குடிப்பது

ஷேவ் செய்த பிறகுபயன்படுத்தும் லோஷன் ,ரொட்டியில் அயோடெக்ஸ் தடவி சாப்பிடுவது போன்ற போதை தரும் வழிகளை பயன்படுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com