வருங்கால மனைவி ஹர்ஷிகா பூனச்சாவுக்கு புதிய வீட்டை பரிசளித்த நடிகர் புவன்

வருங்கால மனைவி ஹர்ஷிகா பூனச்சாவுக்கு புதிய வீட்டை நடிகர் புவன் பரிசளித்தார்.
வருங்கால மனைவி ஹர்ஷிகா பூனச்சாவுக்கு புதிய வீட்டை பரிசளித்த நடிகர் புவன்
Published on

பெங்களூரு-

கன்னட திரையுலகில் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் புவன். அதுபோல் கன்னட திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக இருப்பவர் ஹர்ஷிகா பூனச்சா. இவர்கள் இருவரும் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையை சேர்ந்தவர்கள். கொடவா சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து பின்னர் காதலில் விழுந்தனர்.

இவர்களின் திருமணம் இன்று (புதன்கிழமை) கொடவா சமுதாய பாரம்பரியம்படி விராஜ்பேட்டையில் உள்ள கொடவா சமாஜ திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடக்க உள்ளது.

இந்த நிலையில் நடிகர் புவன், தனது வருங்கால மனைவி நடிகை ஹர்ஷிகா பூனச்சாவுக்கு புதிய வீட்டை பரிசாக அளித்துள்ளார். ஆம், புவன் விராஜ்பேட்டை அருகே உள்ள தனது பண்ணை தோட்டத்தில் ஒரு புதிய வீட்டை கட்டி வந்தார்.

அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தை நேற்று நடத்தினார். அப்போது அவரது வருங்கால மனைவியான ஹர்ஷிகா பூனச்சா தீபம் ஏற்றி சிறப்பு பூஜை செய்தார். இதுதொடர்பான புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

நடிகர் புவன் தனது வருங்கால மனைவியான ஹர்ஷிகா பூனச்சாவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் பரிசு கொடுத்திருந்தார்.

அதாவது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய புவன், தயாரிப்பாளராக ஹர்ஷிகா பூனச்சாவையும் இணைத்துக்கொண்டு புவனம் என்டர்டெயின்மென்ட் பேனரில் புவனம் ஸ்ரேஷ்டம் கச்சாமி என்ற குத்துச்சண்டை வீரர் பற்றிய படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார்.

இதில் கதாநாயகனாக நடிகர் புவன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com