புதிய வருமான வரி மசோதா: இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்

இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.
புதிய வருமான வரி மசோதா: இமெயில், சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்
Published on

புதுடெல்லி,

தனிநபர்களின் கணினிகள், மின்னஞ்சல்கள், சமூக வலைதள கணக்குகளை எந்த முன் அனுமதியுமின்றியும் அணுக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புதிய வருமான வரி மசோதா முழு அதிகாரம் அளிக்கிறது.

இந்நிலையில், இந்திய அரசியலமைப்பு பிரிவு 19(1)(A)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்குள் தலையிடும் அதிகாரமாக இது கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு பிரிவு 21-ன் கீழ், குடிமக்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்களையும் பாதுகாக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி மசோதா குறித்து தற்போது பல்வேறு கவலைகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், வருகிற 2026-27 நிதியாண்டு முதல் இந்த மசோதா அமலுக்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com