புதிய விதிமுறையின்படி மாணவர்கள் வன்முறையில் இறங்கினால் 'டிஸ்மிஸ்' - டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

புதிய விதிமுறையின்படி மாணவர்கள் வன்முறையில் இறங்கினால் ‘டிஸ்மிஸ்’ போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள நிர்வாகம் தயங்காது என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறையின்படி மாணவர்கள் வன்முறையில் இறங்கினால் 'டிஸ்மிஸ்' - டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
Published on

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதன் ஒழுங்கு நடைமுறைகளை தீவிர படுத்தியுள்ளது. அதன்படி மேம்படுத்தப்பட்ட விதிகளை பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறை குழு பிறப்பித்துள்ளது. அதில் 'பல்கலைக்கழக மாணவர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து வளாகத்தினுள் போராட்டம், கைகலப்பு, அடிதடி, விடுதி வளாக பொருட்களை சேதப்படுத்தல், ராகிங் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் பிரச்சினையின் தீவிரத்தின்படி மாணவர் மேல் சஸ்பெண்டு மற்றும் டிஸ்மிஸ் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள நிர்வாகம் தயங்காது'. என்றுள்ளது.

இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com