ஐமுகூட்டணி ஆட்சி காலத்தை விட 2.8 சதவீதம் குறைவான விலையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது: சிஏஜி

ஐமுகூட்டணி ஆட்சி காலத்தை விட 2.8 சதவீதம் குறைவான விலையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது என்று சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐமுகூட்டணி ஆட்சி காலத்தை விட 2.8 சதவீதம் குறைவான விலையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது: சிஏஜி
Published on

புதுடெல்லி,

ரபேல் விவகாரம் பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் மத்திய அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று ரபேல் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு வாரியம் (சிஏஜி) அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 141 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்புத்துறை தொடர்புடைய 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அதில், ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தை விட 2.86 சதவீதம் குறைவான விலைக்கே பாஜக ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த அறிக்கை ஒரு தலைபட்சமானது எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com