

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பீகார் மாநிலத்தில் முசாபர்பூர்- சீதாமர்ஹி- சோன்பர்சா பகுதியை இணைக்கும் 83 கி.மீ. நீள 4 வழிச்சாலையை மேம்படுத்த ₹3 ஆயிரத்து 591 கோடி மதிப்பீட்டில் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய ரெயில்வே அமைச்சகத் தின் 4 ரெயில்வே திட்டங்களுக்கு 39 ஆயிரத்து 450 கோடி செலவில் மந் திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 4 திட்டங்களும், 60 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 6 ஆயிரத்து 448 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.
இதில் தமிழ்நாட்டின் கும்மிடிப்பூண்டிக்கும், ஆந்திர பிரதேச மாநிலம் கூடூ ருக்கும் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு ரெயில் 3, 4-வது வழித்தடம் அமைப்பதும் அடங்கும். இது மேற்கு வங்காளம் ஹவுரா- சென்னை இடையிலான முக்கிய ரெயில் பாதையை 4 வழிப்பாதையாக மாற்றும் பணியை உள்ளடக்கியது. இந்த ஹவுரா- சென்னை இடையிலான வழித்தடம் மிகவும் முக்கியமானது. இந்திய ரெயில்வேயில் முக்கியமான 7 ரெயில் வழித்தடங்கள் உள்ளன. இதில் ஹவுராவில் இருந்து சென்னை வரை, 4 வழி ரெயில்வே பாதை யாக மாற்றுவதால், ஏராளமான ரெயில்கள் இயக்க முடியும்.
சரக்குகளை எளிதாக கொண்டு செல்ல முடிவதுடன், பராமரிப்பு பணிகளை எளிதாக்க முடியும்.மேலும் மேற்கு வங்காளத்தின் கரக்பூருக்கும், ஒடிசாவின் பத்ரக் (ரணி தால்) பகுதிக்கும் இடையே 173 கி.மீ. தொலைவுக்கு 4-வது வழித்தடம் அமைக்கவும், ஒடிசாவின் பத்ரக் மற்றும் ஹரிதாஸ்பூர் இடையே 75 கி.மீ. தொலைவுக்கு 4-வது வழித்தடம் அமைக்கவும், ஒடிசாவில் கட்டாக் மற்றும் படபந்தா இடையே 72 கி.மீ. தூரத்துக்கும் 3-வது மற்றும் 4-வது ரெயில் வழித்தடங்கள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.