

புதுடெல்லி
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் மத்திய அமைச்சர் பதிலளித்தார். அப்போது, புதிய ரூபாய் 500 நோட்டில் 66 மிமி X 150 மிமி என்ற அளவும், புதிய ரூபாய் 2000 நோட்டில் 66மிமி X 166 மிமி என்ற அளவும் உள்ளடங்கியுள்ளன. அமைச்சர் மேக்வால் இதை எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
இன்று காலை மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகள் ரூபாய் நோட்டுக்களில் வெவ்வேறு விதமான வடிவமைப்புகள் உள்ளன என்றும் எனவே புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திற்கு விட்டதில் பெரும் ஊழல் இடம் பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் குலாம் நபி ஆசாத் முன் வைத்தார்.
இக்குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி எதிர்க்கட்சிகள் முக்கியமல்லாத விஷயங்களை எழுப்பு கேள்வி நேரத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறினார்.
கள்ள நோட்டுக்கள் தரம் குறைந்தவை
மேக்வால் தனது பதிலில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி கள்ள நோட்டுக்களின் தரம் குறைவானது என்றும், நாட்டின் சில பகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றை பரிசோதித்தப்போது அவை தரம் குறைந்தவை என்பது தெரிந்தது. இதுவரை தரத்தில் சிறப்பாக காணக்கூடிய கள்ள நோட்டுக்கள் எவையும் எந்தவொரு முகமையும் கைப்பற்றவில்லை என்றார் மேக்வால்.