விலங்குகள் மீதான பரிசோதனைக்கு புதிய விதி: மத்திய அரசுக்கு பீட்டா கடிதம்

மத்திய அரசு அண்மையில் விலங்கு பரிசோதனைகள் தொடர்பாக சில புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
விலங்குகள் மீதான பரிசோதனைக்கு புதிய விதி: மத்திய அரசுக்கு பீட்டா கடிதம்
பீட்டா
Published on: 

புதுடெல்லி,

விலங்குகள் மீதான பரிசோதனைகள் குறித்த புதிய விதிகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பீட்டா இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடுமையான விதிமுறை இருந்தது

இதற்கு முன்பு நாய், குதிரை, பன்றி மற்றும் கால்நடைகள் போன்ற பெரிய விலங்குகள் மீது எந்தவொரு மருத்துவ அல்லது அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமானாலும், டெல்லியில் உள்ள மத்திய அரசின் விலங்குகள் மீதான பரிசோதனைக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழு அமைப்பிடம் முன்கூட்டியே கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற கடுமையான விதிமுறை இருந்தது.

புதிய விதி

தற்போதைய புதிய விதிகளின்படி, இந்த விலங்குகள் மீது நடத்தப்படும் "லேசான அல்லது மிதமான" பரிசோதனைகளுக்கு மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும், ஆய்வகங்களில் உள்ள உள்ளூர் நெறிமுறைக் குழுக்களே இதற்கு நேரடியாக அனுமதி வழங்கி கொள்ளலாம் என்றும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சித்திரவதை

மத்திய அரசு அண்மையில் விலங்கு பரிசோதனைகள் தொடர்பாக சில புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள், விலங்கு நலனுக்கான சுதந்திரமான கண்காணிப்பு முறைகளை முற்றிலும் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதனால் ஆய்வகங்களில் உள்ள விலங்குகள் கடுமையான சித்திரவதைகளுக்கும், அநீதிகளுக்கும் ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விலங்கு பரிசோதனை

எனவே, இந்த ஆபத்தான புதிய விதிகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். காலாவதியான இந்த விலங்கு பரிசோதனை முறைகளை கைவிட்டுவிட்டு, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com