ஆன்லைன் விளையாட்டுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு: மே 1-ந் தேதி முதல் அமல்

சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியமில்லை என தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுக்கான புதிய விதிமுறைகள் வெளியீடு: மே 1-ந் தேதி முதல் அமல்
Published on

புதுடெல்லி,

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதில் சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியமில்லை என தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 'இ-ஸ்போர்ட்ஸ்' விளையாட்டுகளுக்குக் கட்டாயப் பதிவு அவசியம். அரசு தன்னிச்சையாகவோ அல்லது தேவைப்படும் போதோ சில விளையாட்டுகளைக் கண்காணிக்க இந்த விதிகள் உதவும். பயனாளர் பாதுகாப்பு அம்சங்களும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வழிவகை செய்கிறது என்று அவர் கூறி னார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com