

புதுடெல்லி,
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி கடந்த 2025-26-ம் நிதியாண்டில் 863 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.82 லட்சம் கோடி) இருந்தது. இதில் சரக்கு ஏற்றுமதி 442 பில்லியன் அமெரிக்க டாலராகவும், சேவைகள் 418 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தது.
இதை நடப்பு நிதியாண்டில் (2026-27) மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக சரக்கு ஏற்றும்தியை 16 முதல் 17 சதவீதம் வரையும், சேவைகளை 11 சதவீதம் வரையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
அதன்படி மொத்த ஏற்றுமதியை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.95 லட்சம் கோடி) அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக வர்த்தக வாரியக்கூட்டத்தில் பேசும்போது அவர் கூறினார். இதில் சரக்கு ஏற்றுமதியை 530 பில்லியன் அமெரிக்க டாலராகவும், சேவைகளை 470 அமெரிக்க டாலராகவும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார்.