திருப்பதி-சிக்கமகளூரு இடையே புதிய ரெயில் சேவை அறிமுகம்


திருப்பதி-சிக்கமகளூரு இடையே புதிய ரெயில் சேவை அறிமுகம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 July 2025 12:24 PM IST (Updated: 10 July 2025 1:03 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி மற்றும் சிக்கமகளூரு இடையே, காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

திருப்பதி,

ரெயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டபடி, திருப்பதி மற்றும் சிக்கமகளூரு இடையே (காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக) கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஒரு புதிய ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, ரெயில் எண் 17423 திருப்பதி-சிக்கமகளூரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக) ஜூலை 17, 2025 அன்றும், வியாழக்கிழமைகளிலும் இரவு 21.00 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சிக்கமகளூருவை சென்றடையும்.

இதேபோன்று ரெயில் எண் 17424 சிக்கமகளூர்-திருப்பதி வாராந்திர எக்ஸ்பிரஸ் (ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி வழியாக) ஜூலை 18, 2025 அன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 5.30 மணிக்கு சிக்கமகளூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 07.40 மணிக்கு திருப்பதியை சென்றடையும்.

பெட்டி அமைப்பு: 2- ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், 4- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 6- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 1- இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1- லக்கேஜ் கம் பிரேக் வேன்.

1 More update

Next Story