

புதுடெல்லி,
அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் முகப்பு பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி குறித்து செய்தி வெளியிட்ட சமூகவலைதளத்தில் பரவலான செய்திகள் பரவி வந்தது.
அதில், நியூயார்க் டைம்ஸ் நாளிதள் தனது முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு அதில், உலகின் கடைசி மற்றும் நம்பிக்கை என்று குறிப்பிட்டு, உலகின் அதிக நபர்களால் விரும்பப்படும் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை வாழ்த்த இங்கு வந்துள்ளார் என தெரிவிப்பது போன்ற புகைபடங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது.
ஐ.நா. சபையில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில் நியூயார்க் டைம்சில் இதுபோன்ற செய்தி வந்துள்ளதாக கருதி பலரும் இந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துவந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை உலகின் கடைசி நம்பிக்கை என கூறி நியூயார்க் டைம்சில் வெளியான செய்தி போலியானது என தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியை உலகின் மிகவும் விரும்பமான தலைவர் மற்றும் சக்திவாய்ந்த தலைவர் என நியூயார்க் டைம்ஸ் தனது நாளிதழில் எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் போலியானவை என்பது உறுதியாகியுள்ளது.