

ஐதராபாத்,
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் நகரில் உள்ள கூகட் பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக்-மஞ்சுளா. இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இதற்கிடையே கார்த்திக் தூக்குப் போட்டும், மஞ்சுளா விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான 2 மாதத்திலேயே தம்பதி தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.