காதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால்.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

பெண்ணின் ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அதற்காக அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிக்கு சென்றிருந்தார்.
காதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால்.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
Published on

துமகூரு,

காதல் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் புதுமாப்பிள்ளை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவிழாவுக்கு சென்ற காதல் மனைவி

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகாவீர் காலனியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 28). இவரும் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து 6 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் பெண்ணின் ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அதற்காக அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிக்கு சென்றிருந்தார். அங்கு சென்று ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் அந்த பெண் கணவரின் வீட்டுக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது.

விபரீத முடிவு

இதுகுறித்து அவினாஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் சரியாக பதில் சொல்லாமல் இருந்துள்ளார். பின்னர் அவினாஷ் தனது மனைவியை அழைத்து வர பெற்றோருடன் ஹாசனுக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவினாஷ், காதல் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் அந்த பெண், அவினாசுடன் குடும்பம் நடத்த வர மறுத்துள்ளார். மேலும் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அவினாஷ் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவினாஷ், மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

போலீஸ் விசாரணை

பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர், அவினாஷ் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து குனிகல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அவினாசின் உடலை கைப்பற்றி குனிகல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com