உ.பி: மர்ம நபர்களால் சுடப்பட்ட 6 வயது சிறுமி 5 பேருக்கு வாழ்வளித்தார்...!

ரோலி என்கின்ற 6 வயது சிறுமி மர்ம நபர்களால் சுடப்பட்டார்.
உ.பி: மர்ம நபர்களால் சுடப்பட்ட 6 வயது சிறுமி 5 பேருக்கு வாழ்வளித்தார்...!
Published on

நொய்டா,

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் ஹர்நாராயன் - பூனம் தேவியின் மகள் ரோலி. இந்த சிறுமியை கடந்த மாதம் 27-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், தலையில் குண்டு பாய்ந்த நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சிறுமி சென்றார். இருப்பினும் சிறுமியை காப்பாற்ற டாக்டர்கள் முயற்சி செய்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

அதன் பின்னர் சிறுமியின் பெற்றோரிடம் உடல் உறுப்பு தானம் குறித்து டாக்டர்கள், விளக்கி கூறினர். சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர்கள் ஒப்பு கொண்டதை தொடர்ந்து ரோலியின் கல்லீரல், சிறுநீரகங்கள், இரு கருவிழிகள், இதய ரத்தக்குழாய்கள், ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு 5 பேருக்கு பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் இறந்த பின்னரும் 5 பேருக்கு சிறுமி மறுவாழ்வு அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com